Monday, 9 July 2012
சுராங்கனி....
ஒரு காலத்தில் பட்டி தொட்டியெல்லாம் பாடபெற்ற பாடல்.
திரைப்படம் - அவர் எனக்கே சொந்தம்
இசை - இளையராஜா
பாடியவர்கள் - மலேசியா வாசுதேவன், பூரணி
திரைக்கதை வசனம் - பஞ்சு அருணாச்சலம்
இயக்கம் - பட்டு.
-
காந்தி மகாத்மாவா?
”சமயங்களுக்கு இடையே உள்ள தராதரங்களை எவ்வாறு ஒரு பசுவால் உணர்ந்து கொள்ள முடியாதோ, அவ்வாறே அவர்களாலும் (ஹரிஜனங்களாலும்) உணர்ந்து கொள்ள முடியாது… கடவுள் இருக்கிறார் அல்லது இல்லை என்பதைப் பாகுபடுத்திப் புரிந்து கொள்ளும் மனமோ, புத்திக் கூர்மையோ, திறமையோ ஹரிஜனங்களுக்குக் கிடையாது.”---காந்தி.
"இவை கிறித்தவ மதமாற்றம் பற்றிய சங்கராச்சாரியின் அருள் வாக்கல்ல; அல்லது விசுவ இந்து பரிசத்தின் திமிர் பிடித்த கிழட்டுச் சாமியார்கள் யாரும் கூறியதல்ல.
இவை மதமாற்றம் குறித்த ‘மகாத்மாவின்‘ கருத்துக்கள். 1936, 37-ஆம் ஆண்டுகளில் தனது ‘ஹரிஜன்‘ பத்திரிகையில் அவர் எழுதியவை. -
இம்மண்ணின் மக்களை ஐந்தறிவு படைத்த மாட்டோடு ஒப்பிட்டு பேசுபவரை எப்படி தேச தந்தையாக ஏற்றுக்கொள்ள முடியும்.?
ஆதாரம் : (அம்பேத்கர் நூல் தொகுப்பு, தொகுதி -10).
படிக்காத மேதை !
உலகப் புகழ்பெற்ற ‘தாய்’ நாவலை எழுதிய மார்க்ஸிம் கார்கியின் வாழ்க்கை வேதனைகளால் நிரம்பியது. செருப்பு தைப்பது, மூட்டைத்தூக்குவது, மண்பாண்டம் செய்வது, வேட்டையாடுவது, ரயில்பாதை காவலன், மீன்பிடித்தொழில் செய்வது, இடுகாட்டுக்காவலன், பிணம் சுமத்தல், நாடக நடிகன், பழ வியாபாரி என ஏழைகள் செய்யும் அத்தனை வேலைகளையும் செய்தவர் மார்க்ஸிம் கார்க்கி.
வாழ்க்கையின் வறுமையான பக்கங்களை தானே அனுபவித்ததால் தான் அவரால் உலகச் சிறப்புமிக்க உன்னத காவியத்தை படைக்க முடிந்தது போலும்.
கார்கி ஏராளமான நூல்களை எழுதியிருந்தாலும் உலகத்தை ரஷ்யாவின் பக்கம் திரும்பச் செய்தது இந்த தாய் நாவல்தான்.
இன்று சோவியத் பள்ளிகளில் பாடமாக வைக்கப்பட்டுள்ள தாய் நாவலை எழுதிய கார்கி பள்ளிக்கூடமே சென்றதில்லை
Friday, 29 June 2012
சாதியை வைத்துக்கொண்டு....
சாதியை
வைத்துக்கொண்டு
தமிழ் தேசியம் பேசுவது
மலம் மிதித்த காலை கழுவாது
வீட்டுக்குள் நுழைவதைப் போன்றது !
--மன்னை முத்துக்குமார்.
Wednesday, 27 June 2012
அண்ணா மேம்பால பஸ் விபத்தும்-அரசும் !
சென்னை மேம்பால பஸ் விபத்து: 25,000 நிதியுதவி அளிக்க ஜெயலலிதா உத்தரவு.--செய்தி.
# தெரிந்தோ, தெரியாமலோ செய்யும் தவறுக்கு ஆலமரத்தடியில் கொடுத்தால் அபராதம்.
முதல்வர் கொடுத்தால் அது முதல்வர் நிவாரண நிதியா? ?
# செய்ய வேண்டியது கண் துடைப்பு அல்ல, கைப்பேசியோடு பேருந்தை இயக்கும் ஓட்டுனரை சாலை விதிகளை அறவே மதிக்காத ஓட்டுனரை நிரந்தர பணி நீக்கம் செய்வதே ஆகும்.
##தண்டனைகள் கடுமையானால் தான் குற்றங்கள் குறையும் !
Sunday, 17 June 2012
Thursday, 14 June 2012
ஜுன் - 17 உலக தந்தையர் தினம்..
ஒரு தந்தை தன் மகனைத் துவக்கப் பள்ளியில் சேர்த்தார். அவர் தன் மகனுக்கு அறிவுரை சொல்லவில்லை. பள்ளி ஆசிரியருக்கு அவர் எழுதிய கடிதங்களின் சில பகுதிகள்!
தோல்வியை ஏற்றுக்கொள்ளவும், வெற்றியைக் கொண்டாடவும் என் மகனுக்குக் கற்றுக் கொடுங்கள்.
பொறாமையிலிருந்து அவன் விலகியே இருக்கட்டும்.
வானப்பறவைகள், தேனீக்கள், சூரியன், பசுமையான செடிகள், மலர்கள் இவற்றை ரசிக்க அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்.
பிறரை ஏமாற்றுவதை விட, தோற்பது கண்ணியம் என்று அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்.
சுய சிந்தனையில் நம்பிக்கை கொள்ளச் சொல்லுங்கள்.
மென்மையானவர்களிடம் மென்மையாகவும், உறுதியானவர்களிடம் உறுதியாகவும் நடந்து கொள்ளக் கற்றுக் கொடுங்கள்.
குற்றம் குறை கூறுபவர்களை அவன் அலட்சியப்படுத்தட்டும்.
அளவுக்கு அதிகமாய் இனிமையாகப் பேசுபவர்களிடம் அவன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
தன் மனதுக்கு சரி என்று தோன்றுவதை அவன் துணிந்து நின்று போராடி நிறைவேற்ற அவனைப் பழக்குங்கள்.
இதை எழுதிய தந்தை ஆப்ரஹாம் லிங்கன்.
Wednesday, 13 June 2012
இன்று சே குவேராவின் 84 வது பிறந்தநாள்
அன்பிற்கினிய தோழர்களே இன்று( ஜுன் 14) சே குவேராவின் 84 வது பிறந்தநாள் :
சே குவேரா அல்லது எல் சே என பொதுவாக அறியப்பட்ட எர்னெஸ்ட்டோ குவேரா டி லா செர்னா (Ernesto Guevara de la Serna)
ஜுன் 14 1928 அக்டோபர்-9,1967(அர்ஜெண்டினாபிறப்பிடமாகக் கொண்ட ஒரு
சோசலிசப் புரட்சியாளர், மருத்துவர், மார்க்சியவாதி, அரசியல்வாதி, கியூபா
மற்றும் பல நாடுகளின் (கொங்கோ உட்பட) புரட்சிகளில் பங்கு கொண்ட போராளி
எனப் பல முகங்களைக்கொண்டவர்.
மார்க்ஸியத்தில் ஈடுபாடு
மருத்துவம் படித்துக்கொண்டிருக்கும்போது சே
இலத்தீன் அமெரிக்கா முழுவதும் கடினம் மிக்க பயணங்களை மேற்கொண்டிருந்தார்.
அப்பயணங்களின்போது அங்கு நிலவிய வறுமையின் தாக்கத்தினை நேரடியாக
உணர்ந்திருந்தார். இந்த அனுபவங்கள் மூலம் அப்பிரதேசத்தில் இருந்த பொருளாதார
ஏற்றத் தாழ்வுகளுக்கு புரட்சி மூலமே தீர்வு காணமுடியும் என சே நம்பினார்.
இது சே மார்க்சியம் கற்றுக்கொள்ளவும் குவாட்டமாலாவில் நடைபெற்ற சோசலிசப் புரட்சியில் ஈடுபடவும் வழிவகுத்தது.
கியூபாவில் புரட்சி
சில காலத்தின் பின்னர் சே குவேரா தன்னை
பிடம் காஸ்ட்ரோவின் போராட்ட இயக்கத்தில் இணைத்துக்கொண்டார். அவ்வியக்கம்
1959 இல் கியூபாவின் ஆட்சி அதிகாரத்தினைக் கைப்பற்றியது. கியூபாவின் புதிய
அரசில் பல முக்கியமான பதவிகளை சே குவேரா வகித்திருந்தார். அக்காலகட்டத்தில்
கரந்தடி போர்முறை பற்றிய பல கட்டுரைகளையும், புத்தங்களையும்
எழுதியிருந்தார். அதன்பின்னர், கொங்கோ-கின்ஸாசா (தற்போது கொங்கோ ஜனநாயகக்
குடியரசு) மற்றும் பொலிவியா போன்ற நாடுகளின் சோசலிசப் போராட்ட வளர்ச்சிக்கு
தனது பங்களிப்பினை அளிப்பதற்காக 1965 ஆம் ஆண்டில் கியூபாவில் இருந்து
வெளியேறினார்.
பொலிவியாவில் சேகுவேரா
பொலிவியாவில் சி.ஐ.ஏ மற்றும் அமெரிக்க
சிறப்பு இராணுவத்தினது இராணுவ நடவடிக்கை ஒன்றின்போது சே கைது
செய்யப்பட்டார். பொலிவிய இராணுவத்தினரால் வல்லெகிராண்டிற்கு அருகில் உள்ள
லா கிகுவேரா என்னுமிடத்தில் அக்டோபர் 9-1967 இல் சே குவேரா கொல்லப்பட்டார்.
சாட்சிகள் மற்றும் கொலையில் பங்கு பெற்றவர்களிடமிருந்து கிடைத்த
தகவலின்படி, சட்டத்தின் முன் நிறுத்தப்படாமல் கொல்லப்பட்டது
உறுதிப்படுத்தப்படுகிறது.கைதியாக அகப்பட்டு நின்ற நேரத்தில் கூட மரணத்தை
வரவேற்றார்.தன்னை கொல்ல வந்தவனைப் பார்த்தும் ஒரு நிமிடம் பொறு நான்
எழுந்து நிற்கிறேன் பிறகு என்னை சுடு என்று கூறி எழுந்து
நின்றிருக்கிறார்.(காலில் அப்போது குண்டடி பட்டிருந்தது)
அவரது மரணத்தின்பின், சே குவேரா உலகிலுள்ள
சோசலிச புரட்சி இயக்கங்களினால் மிகவும் மரியாதைக்குரியவராக
கொண்டாடப்படுகிறார். சே 1966ம் ஆண்டின் கடைசிகளில் கொரில்லாப் போரை வழி
நடத்தும் பொருட்டு உருகுவே நாட்டு போலி பாஸ்போர்ட்டுடன் பொலிவியா
நாட்டுக்குள் நுழைந்தான். பல காரணங்களால் பொலிவியா நாட்டைத்
தேர்ந்தெடுத்தார் என்று நம்பப்படுகிறது. அமெரிக்கா பொலிவியாவைவிட
கரிப்பியன் பேசின் நாடுகளே தங்கள் பாதுகாப்பிற்கு பங்கம் விளைவிக்கக்கூடும்
என்று நம்பியதும், அதனால் அமெரிக்காவின் பார்வை பொலிவியா மீது அவ்வளவு
தீர்க்கமாக விழவில்லை என்பதும் ஒரு காரணம் . இரண்டாவதாக பொலிவியாவின்
ஏழ்மையும் அங்கு நிலவிய சமூக மற்றும் பொருளாதார நிலைகளும் எந்நேரமும் அங்கு
புரட்சி வெடிக்க சாதகமாக இருந்தது .
மூன்றாவதாக பொலிவியா ஐந்து பிற நாடுகளுடன் தன் எல்லையை பகிர்ந்து கொண்டிருந்தது . பொலிவியாவில் கொரில்லாப் போராட்டம் வெற்றி பெறுமேயானால் அதை மற்ற ஐந்து நாடுகளுக்கும் பரவச் செய்துவிடலாம் என்று குவேரா நினைத்தது. (ஆனால் ஃபிடெல் காஸ்ட்ரோ தன்னை வஞ்சித்து விட்டதாக சே குவேரா மிகவும் வருந்தியதாக 1998ம் ஆண்டு ஓய்வு பெற்ற பொலிவிய ராணுவ அதிகாரி ஒருவர் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். நினோ டி குஸ்மான் என்ற அந்த அதிகாரி குவேராவை சுட்டுக் கொல்வதற்கு முன்பு அவனிடம் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்ததாகவும் அப்போது சே அவனுடைய மனக்குமுறலை வெளியிட்டதாகவும் கூறினார்.

தான் பெரு நாட்டில் புரட்சி செய்ய
முடிவெடுத்ததாகவும் ஆனால் காஸ்ட்ரோ தான் தன்னை வற்புறுத்தி பொலிவிய
நாட்டில் கலகம் விளைவிக்கக் கூறியதாகவும் சே குவேரா கூறியதாக தகவல்
வெளியாயிற்று !!!! மேலும் சே குவேரா பெரு நாட்டின் விவசாயிகள் தன்னுடைய
புரட்சிக்கு ஆதரவு கொடுத்திருப்பார்கள் என்றும் பொலிவிய நாட்டில் விவசாய
மறுமலர்ச்சி திட்டத்தால் மக்கள் அவ்வளவு அதிருப்தியடையாததால் அவர்களின்
ஆதரவு எதிர்ப்பார்த்த அளவுக்குக் கிடைக்கவில்லை என்றும் கூறியதாக அந்த
அதிகாரி கூறியிருந்தார்.
இளமைக்காலம்
சே குவேரா 1928 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 14
ஆம் நாள் அர்ஜெண்டினாவில் உள்ள ரொசாரியோ என்னும் இடத்தில் பிறந்தார்.
ஸ்பானிய ,பாஸ்க்கு,ஐரிய மரபுவழிகளைக் கொண்ட ஒரு குடும்பத்தில் ஐந்து
பிள்ளைகளில் இவர் மூத்தவர். இவரது குடும்பம் இடதுசாரி சார்பான குடும்பமாக
இருந்ததால் மிக இளம் வயதிலேயே அரசியல் தொடர்பான பரந்த நோக்கு இவருக்குக்
கிடைத்தது. இவரது தந்தை, சோசலிசத்தினதும், ஜுவான் பெரோனினதும் ஆதரவாளராக
இருந்தார். இதனால், ஸ்பானிய உள்நாட்டுப் போரில் ஈடுபட்ட குடியரசு வாதிகள்
இவர் வீட்டுக்கு அடிக்கடி வருவதுண்டு. இது சோசலிசம் பற்றிய இவரது
கருத்துக்களுக்கு வழிகாட்டியது.
வாழ்க்கை முழுவதும் இவரைப் பாதித்த ஆஸ்மா
நோய் இவருக்கு இருந்தும் இவர் ஒரு சிறந்த விளையாட்டு வீரராக விளங்கினார்.
இவர் ஒரு சிறந்த “ரக்பி” விளையாட்டு வீரர். இவரது தாக்குதல் பாணி
விளையாட்டு காரணமாக இவரை “பூசெர்” என்னும் பட்டப் பெயர் இட்டு அழைத்தனர்.
அத்துடன், மிக அரிதாகவே இவர் குளிப்பதால், இவருக்கு “பன்றி” என்னும்
பொருளுடைய சாங்கோ என்ற பட்டப்பெயரும் உண்டு.
தனது தந்தையிடமிருந்து சதுரங்கம் விளையாடப்
பழகிய சே குவேரா, 12 ஆவது வயதில் உள்ளூர் சுற்றுப் போட்டிகளிலும் கலந்து
கொண்டுள்ளார். வளர்ந்த பின்பும், பின்னர் வாழ்நாள் முழுவதும் இவர்
கவிதைகளின் மீது ஆர்வம் கொண்டிருந்தார். நெரூடா, கீட்ஸ், மாச்சாடோ,
லோர்க்கா, மிஸ்ட்ரல், வலேஜோ, வைட்மன் ஆகியோரது ஆக்கங்கள் மீது இவருக்குச்
சிறப்பு ஆர்வம் இருந்தது.
குவேராவின் வீட்டில் 3000 நூல்களுக்கு மேல்
இருந்தன. நூல்களை வாசிப்பதில் அவருக்கு இருந்த ஆர்வத்துக்கு இது ஒரு
காரணம் எனலாம். இவற்றுள், மார்க்ஸ்,போல்க்னா,கைடே,சல்காரி,வேர்னே
போன்றவர்கள் எழுதிய நூல்களில் அவருக்குச் சிறப்பான ஆர்வம் இருந்தது. இவை
தவிர நேரு, காப்கா,காமுஸ்,லெனின் போன்றவர்களது நூல்களையும்,
ஏங்கெல்ஸ்,வெல்ஸ்,புரொஸ்ட் ஆகியோருடைய நூல்களையும் அவர் விரும்பி
வாசித்தார்.அவரது வயது அதிகரித்த போது, அவருக்கு லத்தீன் அமெரிக்க எழுத்தாளர்களான குயிரோகா,அலெக்ரியா,இக்காசா,டாரியோஆஸ்ட்டுரியாஸ்
போன்றோருடைய ஆக்கங்களின் பால் ஈடுபாடு ஏற்பட்டது. செல்வாக்கு மிக்க தனி
நபர்களின் கருத்துருக்கள், வரைவிலக்கணங்கள், மெய்யியற் கருத்துக்கள்
போன்றவற்றை எழுதிவந்த குறிப்புப் புத்தகத்தில் இவர்களுடைய கருத்துக்களையும்
அவர் குறித்து வந்தார். இவற்றுள், புத்தர் அரிஸ்ட்டாட்டில் என்போர் பற்றிய
ஆய்வுக் குறிப்புக்கள், பேட்ரண்ட் ரஸ்ஸலின் அன்பு, தேசபக்தி என்பன
குறித்த ஆய்வு, ஜாக் லண்டனின் சமூகம் பற்றிய கருத்துக்கள், நீட்சேயின்
இறப்பு பற்றிய எண்ணங்கள் என்பனவும் அடங்கியிருந்தன. சிக்மண்ட் பிராய்டின்
ஆக்கங்களாலும் கவரப்பட்ட சே குவேரா, அவரைப் பல வேளைகளில் மேற்கோள்
காட்டியுள்ளார்.
1948 ஆம் ஆண்டில் மருத்துவம் படிப்பதற்காக சேகுவேரா, புவன்ஸ் அயர்ஸ்
பல்கலைக் கழகத்தில் சேர்ந்தார். ஆனால் 1951 ஆம் ஆண்டில் படிப்பில் இருந்து
ஓராண்டு விடுப்பு எடுத்துக்கொண்டு, அவரது நண்பரான ஆல்பர்ட்டோ
கிரெனாடோவுடன் சேர்ந்து கொண்டு, மோட்டார் ஈருளியில் தென்னமெரிக்கா முழுதும்
பயணம் செய்தார். பெரு நாட்டில் அமேசான் ஆற்றங்கரையில் இருந்த தொழுநோயாளர்
குடியேற்றம் ஒன்றில் சில வாரங்கள் தொண்டு செய்வது அவரது இப்பயணத்தின் இறுதி
நோக்கமாக இருந்தது. இப்பயணத்தின் போது அவர் எடுத்த குறிப்புக்களைப்
பயன்படுத்தி “மோட்டார் ஈருருளிக் குறிப்புக்கள்” (The Motorcycle Diaries)
என்னும் தலைப்பில் நூலொன்றை எழுதினார். இது பின்னர் நியூ யார்க் டைம்சின்
அதிக விற்பனை கொண்ட நூலாகத் தெரிவு செய்யப்பட்டது. பின்னர் 2004 இல், இதே
பெயரில் எடுக்கப்பட்ட திரைப்படம் விருதுகளையும் பெற்றது.
பரவலான வறுமை, அடக்குமுறை, வாக்குரிமை
பறிப்பு என்பவற்றை இலத்தீன் அமெரிக்கா முழுதும் கண்ணால் கண்டதினாலும்,
மார்க்சிய நூல்களின் செல்வாக்கும் ஒன்று சேர ஆயுதம் ஏந்திய புரட்சி மூலமே
சமூக ஏற்றத் தாழ்வுகளுக்குத் தீர்வு காண முடியும் என சே குவேரா நம்பலானார்.
பயணத்தின் முடிவில், இவர், இலத்தீன் அமெரிக்காவைத் தனித்தனி நாடுகளாகப்
பார்க்காமல், ஒட்டு மொத்தமான கண்டம் தழுவிய விடுதலைப் போர் முறை
தேவைப்படும் ஒரே பகுதியாகப் பார்த்தார். எல்லைகளற்ற ஹிஸ்பானிய அமெரிக்கா
என்னும் சே குவேராவின் கருத்துரு அவரது பிற்காலப் புரட்சி நடவடிக்கைகளில்
தெளிவாக வெளிப்பட்டது. ஆர்ஜெண்டீனாவுக்குத் திரும்பிய சேகுவேரா தனது
படிப்பை முடித்து 1953 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் மருத்துவ டிப்ளோமாப்
பட்டம் பெற்றார்.
1953 ஜூலையில் மீண்டும் பயணமொன்றைத்
தொடங்கிய சேகுவேரா, இம்முறை
பொலிவியா,பெரு,ஈக்குவிடார்,பனாமா,கொஸ்தாரிக்கா,நிக்கரக்குவா,ஹொண்டுராஸ்,
சல்வடோ ஆகிய நாடுகளுக்குச் சென்றார். அதே ஆண்டு டிசம்பரில் சேகுவேரா
குவாதமாலாவுக்குச் சென்றார். அங்கே மக்களாட்சி அடிப்படையில் தெரிவு
செய்யப்பட்ட அரசாங்கம் ஒன்றுக்குத் தலைமை தாங்கிய குடியரசுத் தலைவர்
ஜாக்கோபோ ஆர்பென்ஸ்குஸ்மான் என்பவர் நிலச் சீர்திருத்தங்களின் மூலமும் பிற
நடவடிக்கைகளாலும் பெருந்தோட்ட (latifundia) முறையை ஒழிப்பதற்கு முயன்று
கொண்டிருந்தார். உண்மையான புரட்சியாளனாக ஆவதற்குத் தேவையான அனுபவங்களைப்
பெற்றுக்கொள்ளும் நோக்குடன் குவேரா, குவாத்தமாலாவிலேயே தங்கிவிட முடிவு
செய்தார்.
குவாத்தாமாலா நகரில், சே குவேராவுக்கு
ஹில்டா கடேயா அக்கொஸ்தா என்னும் பெண்ணின் பழக்கம் கிடைத்தது. இவர் பெரு
நாட்டைச் சேர்ந்த ஒரு பொருளியலாளரும், இடதுசாரிச் சார்புள்ள அமெரிக்க
மக்கள் புரட்சிகர கூட்டமைப்பு (American Popular Revolutionary Alliance)
என்னும் இயக்கத்தின் உறுப்பினரும் ஆவார். இதனால் அவருக்கு அரசியல்
மட்டத்தில் நல்ல தொடர்புகள் இருந்தன. இவர் ஆர்பென்சின் அரசாங்கத்தின் பல
உயரதிகாரிகளைச் சேகுவேராவுக்கு அறிமுகப்படுத்தினார். அத்துடன் பிடல்
காஸ்ட்ரோவுடன் தொடர்புகளைக் கொண்டிருந்தவர்களும், கியூபாவைவிட்டு வெளியேறி
வாழ்ந்துவந்தவர்களுமான தொடர்புகளும் சே குவேராவுக்குக் கிடைத்தன. இக்
காலத்திலேயே “சே” என்னும் பெயர் இவருக்கு ஏற்பட்டது. “சே” என்பது நண்பர்
அல்லது தோழர் என்னும் பொருள் கொண்ட ஆர்ஜெண்டீனச் சொல்லாகும்….
இன்றும்
கியூபா தேசத்தின் பள்ளிகளில் தினமும் காலையில் வகுப்பு துவங்கும் முன்
மாணவர்கள் அனைவரும் ஒன்றாக எழுந்து நின்று ---'எமது முன்னோர்கள்
கம்யூனிஸ்ட் களாக இருந்தனர் ,நாங்கள் "சே"வைபோல் வாழ்வோம்'என்று உறுதிமொழி
எடுத்துகொள்கிறார்கள் ""
Saturday, 9 June 2012
இந்த இளவழகியை கண்டுக்காதது ஏன்?
விசுவநாதன் ஆனந்த் க்கு ரூபாய் 2 கோடி பரிசு : கொடுக்கட்டும் ...வேண்டாம் என்று சொல்லவில்லை.ஆனால் . இந்த இளவழகியை கண்டுக்காதது ஏன்?
'2005-ல ஒரு நாள். அமெரிக்காவில் நடக்குற கேரம் போட்டியில் கலந்துக்க எனக்கு வாய்ப்பு. ஆனா, செலவெல்லாம் நான்தான் பார்த் துக்கணும். ஏர்போர்ட்டுக்கு பஸ் டிக்கெட் எடுக்கவே முடியாத எங்க ளால எப்படி ஏரோப்ளேன் டிக்கெட் எடுக்க முடியும்? 'உண்டு... இல்லை'னு சொல்றதுக்கு அன்னிக்குத்தான் கடைசி நாள். கடைசியா ஒரு முயற்சி பண்ணிப் பார்க்கலாமேன்னு தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அதிகாரி டேவிதார் சாரைப் போய்ப் பார்த்தேன். 'கிறிஸ்துதாஸ் காந்தின்னு ஒரு ஐ.ஏ.எஸ். ஆபீஸர் இருக்காரு. அவர் உன்னை மாதிரி கஷ்டப்படுற திறமையான பிளேயர்களுக்கு உதவி பண்ணுவாரு'ன்னு அனுப்பிவெச்சார்.

கிறிஸ்துதாஸ் காந்தி சார் என் சர்ட்டிஃபிகேட்லாம் பார்த்தார். 'உன்னை மாதிரி ஒரு ஆளு எப்படி இந்தப் போட்டியில் கலந்துக்காம இருக்கலாம்..? நீ நிச்சயம் அமெரிக்கா போற. ஸ்போர்ட்ஸ் அத்தாரிட்டி ஆபீஸ்ல இருந்து ஒரு என்.ஓ.சி. லெட்டர் மட்டும் வாங்கிட்டு வந்துரு'ன்னு சொன்னாரு.
ஆச்சர்ய ஆனந்த அதிர்ச்சி. திரும்பவும்
நேரு ஸ்டே டியத்துக்கு ஓடுறேன். அந்த லெட்டர் கிடைச்சாலும் பாஸ்போர்ட்,
விசான்னு ஏகப்பட்ட பஞ்சாயத்து இருக்கே. ரெண்டு, மூணு மணி நேரத்துல எப்படி
எல்லாம் சரியாகும்னு எனக்குப் பதற்றம். ஆனா, நம்ப மாட்டீங்க...
நான் நேரு
ஸ்டேடியம் வர்ற துக்கு முன்னாடியே என்.ஓ.சி. லெட்டர் ரெடியா இருந்துச்சு.
திரும்ப கிண்டி வர்றதுக் குள்ள பாஸ்போர்ட் அப்ளிகேஷன் தயார். அடுத்த அரை
மணி நேரத்துல பாஸ்போர்ட் ரெடி! ரெண்டு மணி நேரத்துக்கு முன்னாடி திக்கு
திசை தெரியாம நின்னவ, இப்போ அமெரிக்கா கிளம்பத் துணிமணி எடுத்துவைக்கணும்.
கிறிஸ்துதாஸ் காந்தி சாருக்குக் கோடிப் புண் ணியம்.
அதிர்ஷ்டம், லக், நல்ல நேரம்னுஎல்லாம் சொல்றாங்களே... அதுக் கெல்லாம் அப்பதான் எனக்கு அர்த்தம் புரிஞ்சுது. நம்ம வேலையை நாம ஒழுங்கா செஞ்சா, நம்மைச் சுத்தி இருக்குற நல்லவங்க நமக்காகச் செய்யுற நல்லதுதாங்க அதிர்ஷ்டம். நல்லவங்க எப்பவும் நல்லது செய்வாங்க. ஆனா, நம்ம வேலையை நாம ஒழுங்கா செஞ்சி ருந்தாதான் அந்த நல்லது அதிர்ஷ்டமா மாறும்!''
Tuesday, 24 April 2012
ஜாதிவாரிக் கணக்கெடுப்புக்கு ..
ஜாதிவாரிக் கணக்கெடுப்புக்கு அலுவலர்கள் வரும்
பொழுது ஜாதிபற்றிய விவரங்களை (உள் ஜாதி உட்பட) சொல்லத் தயங்க வேண்டாம்
என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை
வருமாறு:
இந்தியா முழுமையும் ஜாதிவாரி கணக்கெடுப்புத் தொடங்கப்பட்டு விட்டது. மக்கள் தொகைக் கணக்கெடுப் போடு இந்தத் தகவலும் சேகரிக்கப்பட வேண்டும் என்று சமூக நீதியாளர்கள் தரப்பிலிருந்து குரல் ஓங்கியது.
இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால் ஜாதி ஒழிய வேண்டும் என்ற கொள்கையுடையவர்கள் ஜாதிவாரி கணக்கெடுப்புத் தேவை என்று ஓங்கி ஒலித்தனர்.
ஜாதி இருக்க வேண்டும் - அதனை ஒழிக்கவே கூடாது என்று காலம் எல்லாம் சொல்லிக் கொண்டிருக்கும் உயர் ஜாதி ஆதிக்க சக்திகளோ இத்தகைய கணக்கெடுப்புக் கூடாது என்று வரிந்து கட்டினர்.
இதிலிருந்து இதற்குள் புதைந்திருக்கும் மர்மம் என்ன என்பது சிந்திக்கத்தக்கதாகும்.
ஜாதி ஒழிக்கப்படவில்லையே!
ஜாதி ஒன்றும் சட்டப்படி ஒழிக்கப்படவில்லை. மத ரீதியாகவும், சாஸ்திரங்கள் அடிப்படையிலும் ஜாதி, இந்து சமூக அமைப்பில் கெட்டியாக பாதுகாக்கப்பட்டுள்ளது. இந்திய அரசமைப்புச் சட்டமும் தீண்டாமை ஒழிப்புப் பற்றிப் பேசுகிறதே தவிர, அதற்கு மூல வித்தான ஜாதி ஒழிக என்று எந்த இடத்திலும் கூறப்படவில்லை.
இன்னும் சொல்லப்போனால் அரசு பதிவேடுகளில் சூத்திரன் என்று இருந்தது; அதனை ஒழிப்பதற்குப் பாடுபட்டது - குரல் கொடுத்தது திராவிடர் இயக்கமே.
1901ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் கூட சூத்திரர்கள் என்ற விவரம் தரப்பட்டு இருந்தது.
1927இல் சென்னையில் கூடிய பார்ப்பனர் அல்லாத இளைஞர்களின் முதல் மாநில மாநாட்டில் ஜே.எஸ். கண்ணப்பர், அரசு பதிவேடுகளிலிருந்து சூத்திரன் என்ற சொல் நீக்கப்பட வேண்டும் என்ற தீர்மானத்தை முன் வைத்தார்.
சூத்திரன் என்றால் விபச்சாரி மகன் என்பது உட்பட ஏழு பொருள்களைக் கொண்டது (மனுதர்மம் அத்தியாயம் 8 சுலோகம் 415).
இந்திய அரசமைப்புச் சட்டத்தில் ஜாதியைப் பாதுகாக்கும் பகுதியை எரிக்கும் போராட்டத்தை அறிவித்து நடத்தினார் தந்தை பெரியார் (26.11.1957).
ஆனாலும் இன்றளவுக்கும் ஜாதி பாதுகாப்போடு இந்திய அரசமைப்புச் சட்டத்தில் இருக்கத்தான் செய் கிறது.
அரசுக்குத் தேவை புள்ளி விவரங்கள்....
இந்திய அரசமைப்புச் சட்டத்தில் 18 இடங்களில் ஜாதி (Caste) என்ற சொல் இடம் பெற்றுள்ளது! இந்த ஜாதி முறையால்தான் பெரும்பாலான மக்களுக்குக் கல்வி, வேலை வாய்ப்புகள் மறுக்கப்பட்டன. சமூகத்தில் பிறவியின் அடிப்படையிலேயே ஏற்றத் தாழ்வு - நிலை நிறுத்தப்பட்டது. பிறப்பில் என்ன ஜாதியோ - அதுதான் சுடுகாடுவரை என்ற நிலை இருந்து வருகிறது.
இந்த நிலையில் ஜாதியின் காரணமாக பல வகை களிலும் பாதிக்கப்பட்டவர்கள் உரிமை மறுக்கப்பட்டவர் களைப் பற்றிய புள்ளி விவரங்களை சேகரிப்பதன் மூலம் அத்தகையவர்களுக்கு கல்வி, வேலை வாய்ப்புகளை அளிக்க முடியும், அரசின் நல்வாழ்வுத் திட்டங்கள் இத்தகையவர்களுக்கும் போய்ச் சேர சரியான புள்ளி விவரம் தேவைப்படுகிறது.
நீதிமன்றங்களில் இடஒதுக்கீடு பற்றிய வழக்குகள் வரும்போது நீதிமன்றம் கேட்கும் முதல் கேள்வி - எந்தப் புள்ளி விவரத்தின் அடிப்படையில் (Criteria) இத்தனை சதவிகிதம் என்ற வினாவைத்தான் முன் வைக்கின்றது. அதற்காகவும் இந்தப் புள்ளி விவரம் தேவைப்படுகிறது.
ஓர் அரசுக்கு குடிமக்களின் சமூக, கல்வி, பொருளா தாரம், வேலை வாய்ப்பு நிலை எந்த அளவில் இருக்கிறது என்பதற்கு அடிப்படைப் புள்ளி விவரங்கள் அவசியம் தேவைப்படுகின்றன.
ஜாதியை ஒழிக்க ஜாதி விவரம் தேவை!
ஜாதி ஒழிக்கப்பட வேண்டுமானால் கல்வி, வேலை வாய்ப்புகளில் ஒடுக்கப்பட்ட - கீழ்ஜாதியாக ஆக்கப்பட்ட மக்கள் நூற்றுக்கு நூறு படித்தாக வேண்டும்; (சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் இடஒதுக்கீடு என்று அரசமைப்புச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டு இருப்பது மிக முக்கியம்).
அதற்கு ஜாதி பற்றிய புள்ளி விவரம் தேவைப்படுகிறது. இன்னும் சொல்லப் போனால் ஜாதியை ஒழிக்க - இந்த ஜாதிவாரிக் கணக்கெடுப்புத் தேவை. கல்வி வளர்ந் தால்தான் ஜாதி ஒழிய முடியும். மேலெழுந்தவாரியாகப் பார்த்து ஜாதி விவரத்தை சொல்லத் தயங்க வேண்டாம் என்று ஜாதி ஒழிப்பு இயக்கம் என்ற முறையில் தெரிவித்துக் கொள்கிறோம்.
ஜாதி வாரிக் கணக்கெடுப்பில் ஒரு முக்கிய அம்சம் விடுபட்டு இருப்பதாகச் சொல்லப்படுகிறது. ஜாதியில் உள் ஜாதி பற்றிய விவரம் கேட்கப்படுவதில்லை என்பதுதான் அந்தக் குற்றச் சாற்று. ஜாதிவாரிக் கணக்கெடுப்பு என்று தொடங்கப்பட்ட பிறகு - அதில் ஏன் இந்த விடுபடல்?
உள் ஜாதி
முதலியார் என்றால் அதில் இடஒதுக்கீடு பெறாத சைவ முதலியார்களும் உண்டு. இடஒதுக்கீடு பெறும் செங்குந்த முதலியார்களும் உண்டு. இதில் வெறும் முதலியார் என்றால் புள்ளி விவரம் சேகரிப்பதன் நோக்கமே அடிபட்டுப் போகிறதே! அதில் எது B.C யோ அதைக் குறிப்பிட்டுப் பதிவு செய்ய வற்புறுத்திடல் வேண்டும்.
தாழ்த்தப்பட்டவர்களில் அருந்ததியர்களுக்கு உள் ஒதுக்கீடு தமிழ்நாட்டில் உள்ளது. இந்த நிலையில் பொதுவாக தாழ்த்தப்பட்டவர் என்று சொன்னால் அது எப்படி சரியாகும்?
இத்தகைய தவறுகள் உடனடியாகத் திருத்தப்பட வேண்டும் என்பதே நமது வேண்டுகோள்!
இந்தியாவில் திராவிடர் கழகம் உள்ளிட்ட சமூகநீதி சிந்தனையாளர்களின் அழுத்தமான வலியுறுத்தலின் காரணமாகத்தான் இந்த ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு மத்திய அரசு சம்மதித்தது என்பதையும் இந்நேரத்தில் நினைவூட்டுகிறோம்.
இந்த வாய்ப்பை வீணாக்கி, விழலுக்கிறைத்த நீராக்கி விடக் கூடாது!
கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்

Saturday, 21 April 2012
Wednesday, 18 April 2012
மாணவர்களின் தொடர் தற்கொலைகளுக்கு காரணம்....
மாணவர்கள் தற்கொலைகளுக்கு காரணம்..எது என்பதை சொல்லி தெரிய வேண்டியதில்லை.தன்னால் அடையமுடியாத மருத்துவர், பொறியாளர் தகுதியை தன் குழந்தைகள் அடைந்தே ஆக வேண்டும். சமூகத்தில் தன் மகனோ மகளோ என் மகன் ஒரு பொறியாளர், என் மகள் ஒரு டாக்டர் என்று பெருமை பேசிக்கொள்ள தனது குழந்தையின் விருப்பமும் திறமையையும் ஒரு பொருட்டாகவே கொள்ளாமல் , நீ பொறியியல் படி, அதுவும் சாப்ட்வேர் தான் இனி எல்லாமே , அதையே படி, வெறும் M.B.B.S ., போதாது போஸ்ட் கிராஜுவேஷன் பண்ணு அப்பதான் மறியாதை கிடைக்கும் , இப்படி அலையும் பெற்றோர்களால் தற்கொலைகள் அதிகரிக்காமல் வேறு என்ன எதிர்ப்பாக்கமுடியும்? ஒரு தந்தை தன் மகனுக்கு அறிவுரை சொல்லாமல் அவனுக்கு பாடம் சொல்லிதரும் ஆசிரியருக்கு எழுதிய கடிதத்தை படிங்க..
ஒரு தந்தை தன் மகனைத் துவக்கப் பள்ளியில் சேர்த்தார். அவர் தன் மகனுக்கு அறிவுரை சொல்லவில்லை. பள்ளி ஆசிரியருக்கு அவர் எழுதிய கடிதங்களின் சில பகுதிகள்!
தோல்வியை ஏற்றுக்கொள்ளவும், வெற்றியைக் கொண்டாடவும் என் மகனுக்குக் கற்றுக் கொடுங்கள்.
பொறாமையிலிருந்து அவன் விலகியே இருக்கட்டும்.
வானப்பறவைகள், தேனீக்கள், சூரியன், பசுமையான செடிகள், மலர்கள் இவற்றை ரசிக்க அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்.
பிறரை ஏமாற்றுவதை விட, தோற்பது கண்ணியம் என்று அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்.
சுய சிந்தனையில் நம்பிக்கை கொள்ளச் சொல்லுங்கள்.
மென்மையானவர்களிடம் மென்மையாகவும், உறுதியானவர்களிடம் உறுதியாகவும் நடந்து கொள்ளக் கற்றுக் கொடுங்கள்.
குற்றம் குறை கூறுபவர்களை அவன் அலட்சியப்படுத்தட்டும்.
அளவுக்கு அதிகமாய் இனிமையாகப் பேசுபவர்களிடம் அவன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
தன் மனதுக்கு சரி என்று தோன்றுவதை அவன் துணிந்து நின்று போராடி நிறைவேற்ற அவனைப் பழக்குங்கள்.
இதை எழுதிய தந்தை ஆப்ரஹாம் லிங்கன்.
Monday, 16 April 2012
Sunday, 15 April 2012
Sunday, 8 April 2012
தமிழ்புத்தாண்டு - முழு வரலாறு!
சித்திரை1 தான் தமிழ் புத்தாண்டு என நாம் கொண்டாடி வந்த ஆண்டுக் கணக்கு முறையைக் கவனத்தில் எடுத்துக் கொண்டால் அது சுழற்சி முறையில் இருக்கும். அறுபது ஆண்டுகள் மீண்டும் மீண்டும் வந்தபடியே இருக்கும். இந்த அறுபது ஆண்டுகளுக்கும் 'பரபவ' முதல் 'அட்சய' என்று அறுபது பெயர்கள் இருக்கின்றன. இந்த அறுபது ஆண்டுகளின் பெயரில் ஒரு பெயர் கூடத் தமிழ்ப் பெயர் இல்லை!
இந்த அறுபது ஆண்டு சுழற்சி முறையைக் குறித்து முதலில் கவனிப்போம். இந்த முறை வடநாட்டு மன்னனான சாலிவாகனன் என்பவனால் கிறிஸ்துவுக்கு பின் 78ஆம் ஆண்டில் வடநாட்டில் ஏற்படுத்தப்பட்டது. கனிஷ்கன் என்ற வடநாட்டு அரசனால் இது ஏற்படுத்தப்பட்டது என்று கூறுவோரும் உண்டு. பின்னர் தென்னாட்டில் ஆரியர்களின் ஊடுருவலால், ஆட்சியால் இந்த ஆண்டு முறை படிப்படியாக பரப்பப்பட்டு நிலை நிறுத்தப்பட்டது. எந்த ஓர் இனத்தவரின் ஆட்சி ஒரு நாட்டில் நிறுத்தப்படுகின்றதோ அந்த இனத்தவரின் பழக்க வழக்கங்கள், பண்பாடுகள், கலைகள் போன்றவை அந்த நாட்டினரின் பழக்க வழக்கங்களோடு கலந்து விடுவது இயல்பு. அந்த வகையில் இந்தச் சாலிவாகன முறை பின்னர் மெல்ல மெல்ல தமிழகத்தில் நடை முறைப் பழக்கத்திற்கு வந்து விட்டது. அறுபது ஆண்டு சுழற்சி முறை காரணமாக ஆரியர்களிடையே அறுபது வயது நிரம்பியவர்கள் 'சஷ்டி பூர்த்தி' என்ற அறுபதாண்டு விழாவைக் கொண்டாடும் வழக்கம் இருப்பதைக் கவனியுங்கள்.
மேலும் இந்த அறுபது ஆண்டுகளுக்கான விளக்கம் மிகுந்த ஆபாசம் நிறைந்ததாகும். அபிதான சிந்தாமணி என்ற நூலில் 1392ம் பக்கத்தில் கீழ்வருமாறு குறிப்பிடப்படுகின்றது.
ஒருமுறை நாரதமுனிவர், கடவுள் கிருஷ்ணனை "நீங்கள் அறுபதினாயிரம் கோபிகைகளுடன் கூடி இருக்கின்றீரே, எனக்கு ஒரு பெண்ணையாவது தரலக்கூடாதா?" என்று கேட்டாராம். அதற்குக் கிருஷ்ணன், "நான் உடன் இல்லாம்ல வீட்டில் தனியாய் இருக்கும் பெண்ணை நீ எடுத்துக்கொள்’ என்றாரா,. இதற்கு நாரதர் உடன்பட்டு அறுபதாயிரம் வீடுகளிலும் சென்று பார்த்தார். ஆனால் எங்கும் கிருஷ்ணன் இல்லாத பெண்களைக் காண முடியாததால், நாரதர் மீண்டும் கிருஷ்ணனிடமே வந்து அவர் திருமேனியில் மோகம் கொண்டு அவரை நோக்கி "நான் உங்களிடமே பெண்ணாக இருந்து உடலுறவு கொள்ள விரும்புகிறேன்" என்றார். கிருஷ்ணன் நாரதரை "யமுனையில் குளித்தால் பெண்ணாய் மாறுவாய்" எனச் சொல்ல, நாரதர் அவ்வாறே செய்து, ஓர் அழகுள்ள பெண்ணாக மாறினார். பின் கடவுள் கிருஷ்ணனுடன் அறுபது வருடம் கூடி, அறுபது மகன்களைப் பெற்றார். அவர்கள் ‘பிரபவ தொடங்கி அட்சய முடிய’ என பெயர் பெற்றார்கள். இவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வருஷமாகும் வரம் பெற்றார்கள். இப்படிதான் சித்திரை1ல் ஆரம்பிக்கும் புத்தாண்டு வரலாறு செல்கிறது.
தமிழகத்தில் வானியலில் திறமையான அறிஞர்களை ‘அறிவர், கணி, கணியன்’ என அழைத்தார்கள். அரசனுடைய அவையில் பெரும் புத்தி படைத்த 'கணி'கள் இருந்ததாகச் சிலப்பதிகாரம் கூறுகின்றது. ‘அறிவர்'கள் குறித்துத் தொல்காப்பியரும் குறிப்பிடுகின்றார்.
தமிழர்கள் காலத்தைக் கணித்ததைச் சுருக்கமாகப் பார்ப்போம்.
தமிழர்கள் இயற்கையை ஆதாரமாகக் கொண்டு காலத்தைப் பிரித்தார்கள். ஒரு நாளை கூட ஆறு சிறு பொழுதுகளாகத் தமிழர்கள் அன்றே பிரித்து வைத்தார்கள். ‘வைகறை, காலை, நண்பகல், ஏற்பாடு, மாலை, யாமம்’ என்று அவற்றை அழைத்தார்கள். அது மட்டுமல்ல, அந்த ஆறு சிறு பொழுதுகளின் தொகுப்பையும் அறுபது நாழிகைகளாகப் பகுத்துக் கணக்கிட்டார்கள். அதாவது ஒரு நாளில் ஆறு சிறுபொழுதுகள் உள்ளன. அந்த ஆறு சிறு பொழுதுகள் கழிவதற்கு அறுபது நாழிகைள் எடுக்கின்றன என்று தமிழர்கள் பண்டைக் காலத்தில் கணக்கிட்டார்கள். ஒரு நாழிகை என்பது தற்போதைய 24 நிமிடங்களைக் கொண்டதாகும்.
அதாவது பண்டைக் காலத் தமிழர்களது ஒரு நாட் பொழுதின் அறுபது நாழிகைகள் என்பன தற்போதைய கணக்கீடான 1440 நிமிடங்களோடு, அதாவது 24 மணிநேரத்தோடு அச்சாகப் பொருந்துகின்றன. தமிழர்கள் ஒரு நாள் பொழுதை, தற்போதைய நவீன காலத்தையும் விட, அன்றே மிக நுட்பமாகக் கணித்து வைத்திருந்தார்கள் என்பதே உண்மையுமாகும்.
பின்னாளில் வந்த ஆரியர்கள் ஓர் ஆண்டை நான்கு பருவங்களாக மட்டும்தான் வகுத்தார்கள். ஆனால் பண்டைக்காலத் தமிழர்களோ, தமக்குரிய ஆண்டை, அந்த ஆண்டுக்குரிய தமது வாழ்வை, ஆறு பருவங்களாக வகுத்திருந்தார்கள்.
1. இளவேனில் - ( தை-மாசி மாதங்களுக்குரியது)
2. முதுவேனில் - (பங்குனி - சித்திரை மாதங்களுக்குரியது)
3. கார் - (வைகாசி – ஆனி மாதங்களுக்குரியது)
4. கூதிர் - (ஆடி - ஆவணி மாதங்களுக்குரியது.)
5. முன்பனி – (புரட்டாசி – ஐப்பசி மாதங்களுக்குரியது)
6. பின்பனி – (கார்த்திகை - மார்கழி மாதங்களுக்குரியது)
காலத்தை, அறுபது நாழிகைகைளாகவும், ஆறு சிறு பொழுதுகளாகவும், ஆறு (seasons) பருவங்களாகவும் பகுத்த பண்டைத் தமிழன் தன்னுடைய புத்தாண்டு வாழ்வை இளவேனிற் காலத்தில்தான் தொடங்குகின்றான். இங்கே ஒரு மிக முக்கியமான விசயத்தை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்! பண்பாட்டுப் பெருமை கொண்ட மற்றைய பல இனத்தவர்களும், தங்களுடைய புத்தாண்டு வாழ்வை, தங்களுடைய இளவேனிற் காலங்களில்தான் ஆரம்பிக்கின்றார்கள். தமிழர்கள் மட்டுமல்ல, சீனர்களும், ஜப்பானியர்களும், கொரியர்களும், மஞ்சூரியர்களும் என, பல கோடி இன மக்கள் - தொன்மையான பண்பாட்டு வாழ்வினைக் கொண்ட பெருமை வாய்ந்த மக்கள்- தங்களுடைய இளவேனிற் காலத்தையே தமது புத்தாண்டாகக் கொண்டாடி வருகின்றார்கள்.
இடையில் தமிழர் மட்டும் மாறி விட்டோம்! இடையில் வந்த இடைச்செருகலால் வந்த வினை இது. நம் இளவேனில் காலம் தை மாதம் தான். அதனால் தான் தை முதல் நாளை தமிழ்ப்புத்தாண்டு என்கிறோம்.
தை முதல் நாளை தமிழ்ப்புத்தாண்டாய் அறிவித்த கருணாநிதியைப் பிடிக்காத பலர் சித்திரை முதல் நாளை தான் தமிழ் புத்தாண்டாகக் கொண்டாடுவேன் எனப் பிடிவாதமாக இருக்கிறார்கள். ஜெயலலிதா சித்திரை1 அன்று புத்தாண்டு வாழ்த்து சொல்வதில் ஆச்சரியமில்லை. அந்த அம்மையாருக்கு இதெல்லாம் தெரிந்தால் தானே! நமக்கேனும் கொஞ்சம் சிந்திக்கும் திறன் வேண்டும். நமக்குப் பிடிக்காதவர் நம் சோற்றை, "சோறு" எனச் சொன்னான் என்பதற்காக நம் சோறு மலம் ஆகி விடாது. நமக்குப் பிடிக்காதவர்கள் சொன்னாலும் உண்மை உண்மையே. குறைந்தபட்சம் கீழே பாரதிதாசன் சொல்வதையாவது கேளுங்கள்,
"நித்திரையில் இருக்கும் தமிழா!
சித்திரை இல்லை உனக்குப் புத்தாண்டு
அண்டிப்பிழைக்க வந்த ஆரியக்கூட்டம் கற்பித்ததே
அறிவுக்கொவ்வா அறுபது ஆண்டுகள்
தரணி ஆண்ட தமிழனுக்கு
தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு!"
-பாரதிதாசன்.
Saturday, 7 April 2012
Sunday, 11 March 2012
அரவான்- திரைவிமர்சனம்
பசுபதி(கொம்பூதி/கோம்பொதி) தமிழ்நாடு தெற்கு பகுதியில் அமைந்துள்ள வேம்பூர் கிராமத்திற்கு சமூக தலைவராக உள்ளார். பசுபதியின் தொழிலே வெளியூர் சென்று, திருடி வருவதுதான். திருடி வந்த மதிப்பு மிக்க நகைகளை மிகக் குறைந்த மதிப்புக்கு கொடுத்து, அவர்களிடமிருந்து பண்டமாற்றா நெல் வாங்கி, தான் வாழும் கிராமத்து மக்களுக்கு படி அளக்கிறார்.
இப்படி சென்று கொண்டிருக்கும் போது, அந்த ஊரிலுள்ள மகாராணியின் வைர நெக்ளஸ் காணாமல் போய்விடுகிறது. இதை கண்டுபிடித்து கொடுப்பவர்களுக்கு மிகுந்த சன்மானம், அதாவது 6 மாதத்திற்கு தேவையான அளவு நெல் வழங்கப்படும் என்று அறிக்கை விடப்படுகிறது.
பசுபதி ஓர் இரவு நேரத்தில் நெக்ளஸை தேடிக்கொண்டு போகும்போது தான், ஹீரோ அனாதையான ஆதியின்(வரிபுலி) அறிமுகம் கிடைக்கிறது. ஆதியும் ஒரு களவாணி தான். இந்த வைர நெக்ளஸ் தன்னிடம் தான் இருக்கிறது என்கிறார் ஆதி. பின்பு இவர்களிருவரும் சேர்ந்து கண்டுபிடித்ததாக வைர நெக்ளஸை மகாராணியிடம் ஒப்படைக்கின்றனர். இதனால் அறிவிப்பின் படி அவர்களுக்கு 6 மாதத்திற்கு தேவையான நெல் கிடைக்கிறது.பின்னர் மெதுவாக பசுபதி, ஆதிக்கு குடும்பம் இருக்கிறது என்றும் இவர் ஒரு மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதின்னு பின்னால் இருக்கும் மர்மத்தை கண்டுபிடிக்கிறார்.
இதன் பிறகு ஆதிக்கு தன்ஷிகா(வனப்பேச்சி) மீதுள்ள காதல், உணர்வு, வீரம், துரோகம், சோகம் என்று பிளாஸ்பேக்குடன் கதை நகர்கிறது. மேலும், தன்ஷிகா, பாளையக்காரர், கிங் என்று இவர்களின் பல நினைவுகளோடு, நம்மளையும் சேர்த்து பயணிக்க வைக்கிறது கதை!
ஹீரோ ஆதி தனது சிறப்பான நடிப்பை நிரூபித்திருக்கிறார். இவருடன் பசுபதியும் சேர்ந்து கலக்கியிருக்கிறார். ஹீரோயின் தன்ஷிகா மனதில் நிற்க்கும்படையாக இல்லை. இவர்களுடன் சிங்கம்புலி காமெடி படத்திற்கு பலம்.
அடுத்ததாக ஆர்ட் டைரக்ஷன், அந்த காலத்து 18 ஆம் நூற்றாண்டு மனிதர்களின் ஆடை, அணிகலன்கள், வீடு எல்லாவற்றையும் நம் கண் முன்னே நிறுத்தியிருக்கிறார்கள்.
நடிகர்கள்: ஆதி, பசுபதி, தன்ஷிகா, அர்ச்சனா கவி,சிங்கம் புலி, பரத், அஞ்சலி
இசை: கார்த்திக் (அறிமுகம்)
கேமரா: சித்தார்த்
எடிட்டிங்: பிரவீண் கே எல் மற்றும் என் பி ஸ்ரீகாந்த்
தயாரிப்பு : டி அம்மா க்ரியேஷன்ஸ் சிவா
# ஒரு இனத்தில் 18 ம் நூற்றாண்டில் நடந்த ஒரு நிகழ்வை கண்முன் நிறுத்த எடுத்த முயற்சிக்கு வாழ்த்துக்கள். நிறைகள் ஒளிப்பதிவு, இசை, கதைநாயகன் ஆதியின் அர்ப்பனிப்பு, பசுபதியின் அற்புதமான நடிப்பு. வசனத்தில் வட்டார சொல்லாடல். குறைகள்-வெயில்,அங்காடிதெரு வை படைத்த வசந்தபாலனிடம் தமிழ் சினிமா எதிர்ப்பார்த்த அளவு இல்லை.
-
-
Subscribe to:
Posts (Atom)