முகப்பு.

Monday, 9 July 2012

சுராங்கனி....

ஒரு காலத்தில் பட்டி தொட்டியெல்லாம் பாடபெற்ற பாடல். திரைப்படம் - அவர் எனக்கே சொந்தம் இசை - இளையராஜா பாடியவர்கள் - மலேசியா வாசுதேவன், பூரணி திரைக்கதை வசனம் - பஞ்சு அருணாச்சலம் இயக்கம் - பட்டு. -

அம்மா..

பிதாவும் குருவுமானவள் இந்த மாதா !

விதை !

தன் மீது விழும் மண்ணைச் சுமையென நினைப்பதில்லை விதை ! -மன்னை முத்துக்குமார்.

காந்தி மகாத்மாவா?

”சமயங்களுக்கு இடையே உள்ள தராதரங்களை எவ்வாறு ஒரு பசுவால் உணர்ந்து கொள்ள முடியாதோ, அவ்வாறே அவர்களாலும் (ஹரிஜனங்களாலும்) உணர்ந்து கொள்ள முடியாது… கடவுள் இருக்கிறார் அல்லது இல்லை என்பதைப் பாகுபடுத்திப் புரிந்து கொள்ளும் மனமோ, புத்திக் கூர்மையோ, திறமையோ ஹரிஜனங்களுக்குக் கிடையாது.”---காந்தி. "இவை கிறித்தவ மதமாற்றம் பற்றிய சங்கராச்சாரியின் அருள் வாக்கல்ல; அல்லது விசுவ இந்து பரிசத்தின் திமிர் பிடித்த கிழட்டுச் சாமியார்கள் யாரும் கூறியதல்ல. இவை மதமாற்றம் குறித்த ‘மகாத்மாவின்‘ கருத்துக்கள். 1936, 37-ஆம் ஆண்டுகளில் தனது ‘ஹரிஜன்‘ பத்திரிகையில் அவர் எழுதியவை. - இம்மண்ணின் மக்களை ஐந்தறிவு படைத்த மாட்டோடு ஒப்பிட்டு பேசுபவரை எப்படி தேச தந்தையாக ஏற்றுக்கொள்ள முடியும்.? ஆதாரம் : (அம்பேத்கர் நூல் தொகுப்பு, தொகுதி -10).

படிக்காத மேதை !

உலகப் புகழ்பெற்ற ‘தாய்’ நாவலை எழுதிய மார்க்ஸிம் கார்கியின் வாழ்க்கை வேதனைகளால் நிரம்பியது. செருப்பு தைப்பது, மூட்டைத்தூக்குவது, மண்பாண்டம் செய்வது, வேட்டையாடுவது, ரயில்பாதை காவலன், மீன்பிடித்தொழில் செய்வது, இடுகாட்டுக்காவலன், பிணம் சுமத்தல், நாடக நடிகன், பழ வியாபாரி என ஏழைகள் செய்யும் அத்தனை வேலைகளையும் செய்தவர் மார்க்ஸிம் கார்க்கி. வாழ்க்கையின் வறுமையான பக்கங்களை தானே அனுபவித்ததால் தான் அவரால் உலகச் சிறப்புமிக்க உன்னத காவியத்தை படைக்க முடிந்தது போலும். கார்கி ஏராளமான நூல்களை எழுதியிருந்தாலும் உலகத்தை ரஷ்யாவின் பக்கம் திரும்பச் செய்தது இந்த தாய் நாவல்தான். இன்று சோவியத் பள்ளிகளில் பாடமாக வைக்கப்பட்டுள்ள தாய் நாவலை எழுதிய கார்கி பள்ளிக்கூடமே சென்றதில்லை