பசுபதி(கொம்பூதி/கோம்பொதி) தமிழ்நாடு தெற்கு பகுதியில் அமைந்துள்ள வேம்பூர் கிராமத்திற்கு சமூக தலைவராக உள்ளார். பசுபதியின் தொழிலே வெளியூர் சென்று, திருடி வருவதுதான். திருடி வந்த மதிப்பு மிக்க நகைகளை மிகக் குறைந்த மதிப்புக்கு கொடுத்து, அவர்களிடமிருந்து பண்டமாற்றா நெல் வாங்கி, தான் வாழும் கிராமத்து மக்களுக்கு படி அளக்கிறார்.
இப்படி சென்று கொண்டிருக்கும் போது, அந்த ஊரிலுள்ள மகாராணியின் வைர நெக்ளஸ் காணாமல் போய்விடுகிறது. இதை கண்டுபிடித்து கொடுப்பவர்களுக்கு மிகுந்த சன்மானம், அதாவது 6 மாதத்திற்கு தேவையான அளவு நெல் வழங்கப்படும் என்று அறிக்கை விடப்படுகிறது.
பசுபதி ஓர் இரவு நேரத்தில் நெக்ளஸை தேடிக்கொண்டு போகும்போது தான், ஹீரோ அனாதையான ஆதியின்(வரிபுலி) அறிமுகம் கிடைக்கிறது. ஆதியும் ஒரு களவாணி தான். இந்த வைர நெக்ளஸ் தன்னிடம் தான் இருக்கிறது என்கிறார் ஆதி. பின்பு இவர்களிருவரும் சேர்ந்து கண்டுபிடித்ததாக வைர நெக்ளஸை மகாராணியிடம் ஒப்படைக்கின்றனர். இதனால் அறிவிப்பின் படி அவர்களுக்கு 6 மாதத்திற்கு தேவையான நெல் கிடைக்கிறது.பின்னர் மெதுவாக பசுபதி, ஆதிக்கு குடும்பம் இருக்கிறது என்றும் இவர் ஒரு மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதின்னு பின்னால் இருக்கும் மர்மத்தை கண்டுபிடிக்கிறார்.
இதன் பிறகு ஆதிக்கு தன்ஷிகா(வனப்பேச்சி) மீதுள்ள காதல், உணர்வு, வீரம், துரோகம், சோகம் என்று பிளாஸ்பேக்குடன் கதை நகர்கிறது. மேலும், தன்ஷிகா, பாளையக்காரர், கிங் என்று இவர்களின் பல நினைவுகளோடு, நம்மளையும் சேர்த்து பயணிக்க வைக்கிறது கதை!
ஹீரோ ஆதி தனது சிறப்பான நடிப்பை நிரூபித்திருக்கிறார். இவருடன் பசுபதியும் சேர்ந்து கலக்கியிருக்கிறார். ஹீரோயின் தன்ஷிகா மனதில் நிற்க்கும்படையாக இல்லை. இவர்களுடன் சிங்கம்புலி காமெடி படத்திற்கு பலம்.
அடுத்ததாக ஆர்ட் டைரக்ஷன், அந்த காலத்து 18 ஆம் நூற்றாண்டு மனிதர்களின் ஆடை, அணிகலன்கள், வீடு எல்லாவற்றையும் நம் கண் முன்னே நிறுத்தியிருக்கிறார்கள்.
நடிகர்கள்: ஆதி, பசுபதி, தன்ஷிகா, அர்ச்சனா கவி,சிங்கம் புலி, பரத், அஞ்சலி
இசை: கார்த்திக் (அறிமுகம்)
கேமரா: சித்தார்த்
எடிட்டிங்: பிரவீண் கே எல் மற்றும் என் பி ஸ்ரீகாந்த்
தயாரிப்பு : டி அம்மா க்ரியேஷன்ஸ் சிவா
# ஒரு இனத்தில் 18 ம் நூற்றாண்டில் நடந்த ஒரு நிகழ்வை கண்முன் நிறுத்த எடுத்த முயற்சிக்கு வாழ்த்துக்கள். நிறைகள் ஒளிப்பதிவு, இசை, கதைநாயகன் ஆதியின் அர்ப்பனிப்பு, பசுபதியின் அற்புதமான நடிப்பு. வசனத்தில் வட்டார சொல்லாடல். குறைகள்-வெயில்,அங்காடிதெரு வை படைத்த வசந்தபாலனிடம் தமிழ் சினிமா எதிர்ப்பார்த்த அளவு இல்லை.
-
-


